Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

ADDED : ஜூலை 12, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
* நியாயமான ஆசைகளை மனதில் வளர்த்து, அவற்றை வேண்டுதல்களாக இறைவன் முன் வைத்து, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை செய்கிறவனுக்கு இறைவனின் அருளாசி கிடைக்கும்.

* அற்ப விஷயத்திற்காக கோபப்பட்டால் உலகிற்கு வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதால், பொறுமையோடு இருந்து அவர்களை மன்னிக்க வேண்டும்.

* பிறரது குற்றம் குறைகளைக் காணாதீர்கள். அவைகளைக் கேட்கவோ, பேசவோ செய்யாதீர்கள். அனைவரிடமும் அனைத்திலும் நல்லவற்றையே காண முயலுங்கள். பிறரது தவறுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

* வாழ்க்கையின் சுமை அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து அர்ப்பண மனப்பான்மையுடன் வாழ்ந்தால் கவலை இருக்காது. கடவுளும் நம்மைக் காத்தருள்வார்.

* இறைவனைத் தஞ்சமடைந்தால் ஆன்மிக வளர்ச்சியும், வாழ்க்கைக்கு தேவையான பொருள்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

- மாதா அமிர்தானந்தமயி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us